spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் கேரக்டர் சுமாரா இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்.... சூரியின் 'மண்டாடி' குறித்து சத்யராஜ்!

என் கேரக்டர் சுமாரா இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்…. சூரியின் ‘மண்டாடி’ குறித்து சத்யராஜ்!

-

- Advertisement -

நடிகர் சத்யராஜ் மண்டாடி படம் குறித்து பேசி உள்ளார்.என் கேரக்டர் சுமாரா இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்.... சூரியின் 'மண்டாடி' குறித்து சத்யராஜ்!

சூரி நடிப்பில் தற்போது உருவாகும் திரைப்படம் தான் மண்டாடி. இந்த படத்தை ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். இதில் சூரி வேறொரு பரிமாணத்தில் நடிக்கிறார். இவருடன் இணைந்து சத்யராஜ், மகிமா நம்பியார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படமானது படகு பந்தயம் தொடர்பான கதைக்களத்தில் உருவாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்களை நடிகர் சத்யராஜ் பகிர்ந்துள்ளார். என் கேரக்டர் சுமாரா இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன்.... சூரியின் 'மண்டாடி' குறித்து சத்யராஜ்!அதன்படி அவர், “மண்டாடி படம் தொடர்பாக இயக்குனர் மதிமாறன் என் வீட்டிற்கு வந்தார். அந்த கதையை சொல்வதற்கு முன்பாக ஒரு மேக்கிங் வீடியோவை காட்டினார். அதை பார்த்து நான் பிரமித்து விட்டேன். இந்த மாதிரி ஒரு படகுப்போட்டி எங்கேயுமே பார்த்ததில்லை கேள்விப்பட்டதில்லை என்று கேட்டேன். அதற்கு அவர் ராமேஸ்வரம் பகுதியில் நடக்கிறது என்று சொன்னார். ஒரிஜினல் பந்தயத்தை எடுத்து இருக்கிறார்கள். இதை எப்படி சினிமாவாக எடுக்க முடியும் என யோசித்தேன். அதேசமயம் மனதிற்குள் என் கேரக்டர் சுமாராக இருந்தாலும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அப்புறம் அவர் கதை சொன்னார். கதை கதையும் நன்றாக இருந்தது. என் கேரக்டரும் நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. மதிமாறன் இதை ஆராய்ச்சி பண்ணி சொல்றாரு. அதுதான் முக்கியம். அவர் மிகவும் ஆழமாக இறங்கி இருக்கிறார். இந்த கதையை எடுக்க மிகவும் செலவாகும்.

we-r-hiring

அதற்காக எல்ரெட் குமாருக்கும், வெற்றிமாறனுக்கும் ஹாட்ஸ் ஆப். நல்ல ஒரு கதாநாயகனாக மாறியுள்ள என் அன்பு தம்பி சூரியின் கெட்டப் பிரமாதமாக இருக்கிறது. சூரி எந்த அளவிற்கு இறங்கி வேலை செய்வாரே என்பதை பல படங்களில் பார்த்திருக்கிறோம். அடுத்தது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகப்பெரிய ஆட்கள். இந்த படத்தில் நடிக்கவும் இந்த படத்தின் ரிலீஸுக்காகவும் ஒரு சினிமா ரசிகனாக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ