Homeசெய்திகள்சினிமாஅந்த விஷயத்தை மறைமுகமாக சொல்கிறது.....'போட்' படம் குறித்து நடிகர் சிவகுமார்!

அந்த விஷயத்தை மறைமுகமாக சொல்கிறது…..’போட்’ படம் குறித்து நடிகர் சிவகுமார்!

-

நடிகர் சிவகுமார் போட் பட இயக்குனர் சிம்பு தேவனை வாழ்த்தி உள்ளார்.அந்த விஷயத்தை மறைமுகமாக சொல்கிறது.....'போட்' படம் குறித்து நடிகர் சிவகுமார்!

யோகி பாபு நடிப்பில் உருவாகியிருந்த போட் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தை இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்கியிருந்தார். மாலி அண்ட் மான்வி நிறுவனம் படத்தை தயாரித்திருந்த நிலையில் ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து கௌரி கிஷன், எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சர்வைவல் படமாக உருவாகியிருந்த இந்த படம் முழுவதும் கடலுக்குள் எடுக்கப்பட்டிருந்தது. அதாவது சிக்கன் வரும்போது தனக்கு உதவி செய்த சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய அளவிற்கு சுயநலம் எப்படி தலைதூக்கி நிற்கிறது என்பதை காமெடியாகவும் சுவாரசியமாகவும் காட்டியிருந்தார் சிம்பு தேவன். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் சிவகுமார் போட் படம் குறித்தும் சிம்பு தேவன் குறித்தும் பேசியுள்ளார். அந்த விஷயத்தை மறைமுகமாக சொல்கிறது.....'போட்' படம் குறித்து நடிகர் சிவகுமார்!அவர் பேசியதாவது, “சிம்பு தேவன் என் பிள்ளை மாதிரி. ஆனந்த விகடனில் அவர் கார்ட்டூன் போட்டுக் கொண்டிருந்தபோதே நான் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு நாள் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி என்ற திரைப்படத்தை எழுதியிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அடுத்ததாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்தையும் இவர் இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தில் வசனம், காமெடி, காட்சிகள் எல்லாம் சூப்பராக இருந்தது. இப்போது அவருடைய போட் படம் பார்த்தேன். இரண்டாவது உலகப் போர் 1939 முதல் 1945 காலகட்டங்களில் நடந்த போது 1943 இல் ஜப்பான், இந்தியா மீது குண்டு வீசிய சம்பவத்தை பின்னணியாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஜப்பான் குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க மீனவனான யோகி பாபு தனது பாட்டியுடன் படகில் ஏறி செல்கிறார். அப்போது அவருடன் இணைந்து ஒரு ஐயர், ஒரு ராஜஸ்தானி, ஒரு மலையாளி என ஒரு எட்டு பேர் அதே படகில் ஏறி தப்பித்து செல்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே ஏறுகிறது. அப்பொழுது படகில் இருந்து இரண்டு பேர் வெளியேறினால் தான் தப்பிக்க முடியும் என்ற சூழல் உண்டாக யோகி பாபுவையும் அவரது பாட்டியையும் வெளியேற்ற திட்டம் தீட்டுகிறார்கள். அதன் பிறகு முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதி கதை. கடலுக்குள்ளேயே முழு படத்தையும் காலை, மாலை, இரவு என படமாக்குவது சாதாரண விஷயம் கிடையாது. சினிமா ஒரு பவர்ஃபுல் வீடியோ. 1940களில் நம் நாடும் நாட்டு மக்களும் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய பிரச்சனை என்ன? என்பதை காமெடியாகவும் சுவாரசியமாகவும் சொல்லி இருந்த இயக்குனர் சிம்பு தேவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். துணிச்சலாக இந்த படத்தை தயாரித்த பிரபா மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ