நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்த முடித்துள்ளார். அடுத்தது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இதற்கிடையில் இவர், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படமானது பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா தவிர, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தினை ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
#Suriya & KajalAgarwal family meet at Mumbai Airport❤️✈️
Suriya is flying to different cities for #Kanguva promotion tour💥pic.twitter.com/jaJo4MsG0z— AmuthaBharathi (@CinemaWithAB) October 19, 2024
ஏற்கனவே மும்பையில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்ற நிலையில் இன்னும் பல நாடுகளில் ப்ரமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடிகை காஜல் அகர்வாலை அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தித்துள்ளார் சூர்யா. இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் இணைந்து மாற்றான் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.