கலைஞர் நினைவிடத்திற்கு சென்ற வடிவேலு இது சமாதி அல்ல சன்னதி என்று நெகழ்ச்சியாக பேசியுள்ளார்.
மெரினாவில் புதிதாக புனரமைக்கப்பட்ட கலைஞர் நினைவிடத்தை சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு அரசியல் பிரமுகர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு நேற்று கலைஞரின் நினைவிடத்திற்கு சென்று மறைந்த கலைஞர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து அங்குள்ள அருங்காட்சியகத்திற்கும் சென்று ஏஐத் தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞருடன் உரையாடினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்க்க பிரம்மிப்பாக இருக்கிறது. இது கலைஞர் ஐயாவின் சமாதி இல்லை. பெரிய சன்னதி. அவர் எவ்வளவு பெரிய போராளி எவ்வளவு போராட்டங்களை கடந்து கஷ்டங்களை கடந்து வந்தவர் என்பதை அனைத்தையும் இங்கு அறிந்து கொள்ளலாம். வருகின்ற ஆறாம் தேதியிலிருந்து பொது மக்களுக்கும் இங்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படும். மேலும் இது மணிமண்டபம் அல்ல மணிமகுடம் கலந்த மணிமண்டபம். உலக மக்கள் அனைவரும் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். முதல்வர் மு க ஸ்டாலின் ஐயா இதை அருமையாக ஏற்பாடு செய்திருக்கிறார். எங்கள் அனைவரும் வந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரியும்” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.


