- Advertisement -
கோலிவுட் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்களால் வைகை புயல் என்று கொண்டாடப்படும் ஒரே நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக தனக்கென தனி இடத்தையும் தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. கலந்து சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இடைவெளி எடுத்து இருந்தார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் திரைப்படத்தில் நடித்திருந்தனர். திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது.

மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பகத் பாசிலுடன் இணைந்து புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இது மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்திற்கு மாரீசன் என்று தலைப்பு வைத்துள்ளனர் . இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி பல படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் வடிவேலு ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றுள்ளார். அவரது அம்மா மறைந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் இராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று இருந்தார்




