Homeசெய்திகள்சினிமாஎச்.வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகர் விஜய்!

எச்.வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகர் விஜய்!

-

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருவது மட்டுமல்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். எச் வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகர் விஜய்!அந்த வகையில் இவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தனது 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்த வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தனது 69 ஆவது படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார் விஜய். எனவே விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப் போகிறார் என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தளபதி 69 படத்தின் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச் வினோத், அட்லீ, த்ரிவிக்ரம் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். சமீபத்தில் எச் வினோத் அல்லது த்ரிவிக்ரம் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவரை விஜய் தனது கடைசி பட இயக்குனராக தேர்ந்தெடுப்பார் என்று சொல்லப்பட்டது. தற்போது நடிகர் விஜய் எச் வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. எச் வினோத்துக்கு கிரீன் சிக்னல் காட்டிய நடிகர் விஜய்!எச் வினோத் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருந்தார். ஒரு சில காரணங்களால் அந்த படம் தள்ளி போக பிறகு தனுஷை இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இது சம்பந்தமான அறிவிப்பை எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்கப் போகிறார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ