- Advertisement -
பிரபல நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம், சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர குடும்பம் தான் விஜயகுமாரின் குடும்பம். தமிழில் சுமார் 400 படங்களில் நடித்துள்ள விஜயகுமாருக்கு, அருண்விஜய், கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி ஆகிய குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரையில் இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். . தொடக்கத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வந்த அவர் தற்போது தந்தை, தாத்தா உள்பட குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
