நடிகர் விக்ரம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் பல வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விக்ரம் தங்கலான் எனும் திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்க இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான டிரைலரும் அதைத் தொடர்ந்து வெளியான முதல் இரண்டு பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மேன்மேலும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
எனவே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கு ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர்
விக்ரம் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது “தங்கலான் படத்தில் சர்ப்ரைஸ்கள் நிறைந்திருக்கும். திரையரங்குகளில் பார்க்கும்போது நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இந்த படத்தில் மேஜிக், சாகசம், எமோஷனல், சின்ன சின்ன செய்திகள் அனைத்தும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -