நடிகை அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து ராட்சசன், அசுரன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கண்ணகி திரைப்படத்திலும் சமீபத்தில் வெளியான ஹாட் ஸ்பாட் திரைப்படத்திலும் அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அம்மு அபிராமி.
இதற்கிடையில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தக் காதலர் வேறு யாரும் அல்ல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களின் இயக்குனர் பார்த்திவ் மணி. ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது அம்மு அபிராமி வெளியிட்டிருக்கும் பதிவு அதனை உறுதி செய்துள்ளது.
அந்த பதிவில், “பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி” என்று குறிப்பிட்டு பார்த்திவ் மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் அம்மு அபிராமி. இதன் மூலம் ரசிகர்கள் பலரும் இருவரும் காதலர்கள் என்பது உறுதி தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -