Homeசெய்திகள்சினிமாமலையாளம், தமிழை அடுத்து தெலுங்கில் கால்தடம் பதிக்கும் டாடா நடிகை!

மலையாளம், தமிழை அடுத்து தெலுங்கில் கால்தடம் பதிக்கும் டாடா நடிகை!

-

- Advertisement -

நடிகை அபர்ணா தாஸ் தெலுங்கு சினிமாவின் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையாளத்தில் சில படங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் அதையடுத்து நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து கவின் உடன் ‘டாடா’ படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதையடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்தன.

இந்நிலையில் அபர்ணா தாஸ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் PVT04 என்று தலைப்பு வைக்கப்பட்ட படத்தின் அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார். இப்படத்தில் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ஸ்ரீ லீலா, ஜோஜு ஜார்ஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். 

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவைக் கலக்கிய அபர்ணா தாஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் தன் கால் தடம் பதிக்க ஆயத்தம் ஆகியுள்ளார்.

MUST READ