spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"நான் சரியாகிட்டேன், உங்க அன்புக்கு நன்றி"... வீடு திரும்பிய குஷ்பூ!

“நான் சரியாகிட்டேன், உங்க அன்புக்கு நன்றி”… வீடு திரும்பிய குஷ்பூ!

-

- Advertisement -

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

we-r-hiring

“நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. இப்போது என்னையும் தாக்கியுள்ளது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

kushbu-y.jpg

உங்கள் உடல் சில அறிகுறிகளை மெதுவாகச் சொல்லும் போது தயவு செய்து அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். மீட்புக்கான பாதையில், ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.” என்று தான் வெளியிட்டிருந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது குஷ்பூ பூரண குணமடைந்து டிஸ்சார்ச் ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“மருத்துவமனையை விட்டு வெளியேறி வீட்டிற்குத் திரும்பிவிட்டேன். இன்னும் சிறிது நேரம் முழுமையாக ஓய்வெடுக்க பரிந்துரைத்துள்ளனர். ஒரு வாரத்திற்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும். மருத்துவர்களுடன் மறுபரிசீலனை செய்து, அதன் பின்னரே வேலை செய்யத் தொடங்க வேண்டுமாம். என் நலனுக்காக உலகம் முழுவதும் இருந்து கொட்டிய அன்புக்கு மிக்க நன்றி. இவ்வளவு அன்பைப் பெறுவதற்கு உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ