நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்‘ படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பெத்த மனம் பித்து’, ‘மெல்ல நட மருமகள்’, ‘நினைத்தாலே இனிக்கும் ’,‘அபூர்வ ராகங்கள்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அலைபாயுதே, தோழா, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் அம்மாவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் நடித்துள்ள இவர், முதல் கணவர் வடே ரமேஷுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தார்.

பின்னர் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் உறவினரான நிதின் கபூரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நிதின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜெயசுதா, இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதன்படி, அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஜெயசுதாவிற்கு 64 வயதாகிறது. அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. அதை ஜெயசுதா மறுத்திருந்தார். இந்நிலையில், ஜெயசுதாவும் அந்த தொழிலதிபரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மீண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஜெயசுதா நபர் ஒருவருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.