Homeசெய்திகள்சினிமாகோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.... உண்மையா? வதந்தியா?

கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்…. உண்மையா? வதந்தியா?

-

- Advertisement -
kadalkanni

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.... உண்மையா? வதந்தியா?அதே சமயம் கதாநாயகிகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா எனும் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது பேபி ஜான், ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் உலா வருவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால் ஏகப்பட்ட முறை நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவி வந்த சமயத்தில் அதற்கு கீர்த்தி சுரேஷ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது. கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்.... உண்மையா? வதந்தியா?தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல் தீயாய் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் (டிசம்பரில்) அவரது உறவினர் ஒருவருடன் கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை கீர்த்தி சுரேஷ் தரப்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ