spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம்!

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம்!

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம்!

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. அதன்படி கடந்த 15 வருடங்களாக தனது நெருங்கிய நண்பர் ஆண்டனி தட்டிலை கீர்த்தி சுரேஷ் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனை கீர்த்தி சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கத்திலும் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் தனது திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதையும் உறுதி செய்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு விதமான திருமணம்!நடிகை கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ஆண்டனி தட்டில் கிறித்துவ மதத்தை சார்ந்தவர் என்பதாலும் இந்து முறைப்படியும் கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற இருக்கிறதாம். காலையில் இந்து முறைப்படியும் மாலையில் கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ