Homeசெய்திகள்சினிமாரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது..... நடிகை குஷ்பூ வருத்தம்!

ரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது….. நடிகை குஷ்பூ வருத்தம்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது..... நடிகை குஷ்பூ வருத்தம்!இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். இதற்கிடையில் நடிகர் ரஜினி, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பூ, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற தோல்வி படமாக அமைந்தது. ரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது..... நடிகை குஷ்பூ வருத்தம்!இந்த நிலையில் நடிகை குஷ்பூ, அண்ணாத்த படத்தில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அதன்படி நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில், “அண்ணாத்த படத்தில் நானும் மீனாவும் நடித்தோம். இதில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்று சொன்னார்கள். எனவே எங்களுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று சொன்னார்கள். ரஜினியுடன் எனக்கும் மீனாவுக்கும் டூயட் பாடல் இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் நம்பி அந்த படத்தில் நடித்தேன். ஆனால் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக நயன் நடிக்க வந்தார்.ரஜினியின் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது..... நடிகை குஷ்பூ வருத்தம்! இதனால் என்னுடைய கதாபாத்திரம் காமெடியாக மாறியது. படத்தை பார்த்த பிறகு எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இப்போது வரையிலும் அந்த படத்தில் நடித்திருக்கவே கூடாது என்று வருத்தப்படுகிறேன். இந்த படத்தில் நடந்த கேரக்டர் மாற்றத்திற்கு ரஜினி காரணமாக இருக்க மாட்டார். ஏனென்றால் பல வருடங்களாகவே அவரை எனக்கு தெரியும். இது இயக்குனரின் விளையாட அல்லது தயாரிப்பாளரின் வேலையா என்பது எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ