நடிகை குஷ்பு, பிரபல ஹீரோ ஒருவரை செருப்பால் அடிக்கவா என கேட்டதாக கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு, பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர். சி- யின் மனைவி என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இவர், தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் அதே வேளையில் நிஜ வாழ்க்கையில் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 1980 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கி அதைத்தொடர்ந்து வருஷம் 16 என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் சத்யராஜ், பிரபு, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, பிரபல ஹீரோ ஒருவர் தன்னிடம் ஆபாச தொனியில் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது பிரபல ஹீரோ, தன்னிடம் ஒருமுறை சான்ஸ் தருவீர்களா என தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதற்கு நடிகை குஷ்பு அந்த ஹீரோவிடம் செருப்பால் அடிக்கவா என கேட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் குஷ்பு அந்த ஹீரோ யார் என்பதை குறிப்பிடவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அந்த ஹீரோ யாராக இருக்கும் என்று விவாதித்து வருகின்றனர்.