தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அதே சமயம் இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தொடர்ந்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கிட்டத்தட்ட 12 வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரின் திருமண வாழ்க்கையும் சில வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதே சமயம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமந்தா, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில காலங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கும் சமந்தா தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் சுபம் என்று தெலுங்கு படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே மாதம் 9ஆம் தேதி திரைக்க வர இருக்கிறது. இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தான் நடிகை சமந்தா மேடையில் அடிக்கடி கண் கலங்குவது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் அவர், “நான் அடிக்கடி மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனல் இல்லை. எனக்கு அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் என்னுடைய கண்கள் சென்சிட்டிவ் ஆகி கண்ணீர் வரும். இதன் காரணமாக தான் நான் மேடையில் இருக்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. மற்றபடி வேறு எதுவும் இல்லை. நான் மகிழ்ச்சியாகவும், நன்றாகவும், ஆர்வத்துடனும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -