spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றி நடைபோடும் 'கோட்'.... ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கிய நடிகை சினேகா!

வெற்றி நடைபோடும் ‘கோட்’…. ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கிய நடிகை சினேகா!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா கடந்த 2003ஆம் ஆண்டு விஜயுடன் இணைந்து வசீகரா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். வெற்றி நடைபோடும் 'கோட்'.... ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கிய நடிகை சினேகா!அதன் பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜயுடன் கோட் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் சினேகா. இவர்களின் காம்பினேஷன் வசீகரா திரைப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் எப்படி பெரும் வரவேற்பை பெற்றதோ, அதைப்போலவே கோட் படத்திலும் இவர்களின் காம்போ ரசிகர்களை கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று (செப்டம்பர் 5) வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கோட் திரைப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார். படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. வெற்றி நடைபோடும் 'கோட்'.... ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கிய நடிகை சினேகா!அதிலும் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்தின் கேமியோ, சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோரின் கேமியோ திரையரங்கையே அதிர வைத்தது. இந்நிலையில் நடிகை சினேகா, கோட் படத்திற்கு கிடைத்த வெற்றியை ஈசிஆரில் உள்ள விஜயா திரையரங்கில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மரக்கன்று வழங்கி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

MUST READ