spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுபாய் பிரபலத்தை காதலிக்கும் நடிகை சுனைனா

துபாய் பிரபலத்தை காதலிக்கும் நடிகை சுனைனா

-

- Advertisement -
நடிகை சுனைனா, துபாயைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் கலித் அல் அமேரியை காதல் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு நடிகைகள் பீக்கில் இருப்பது வழக்கமாகும். அப்படி ஒரு கட்டத்தில் பீக்கில் இருந்த நடிகை தான் சுனைனா. இவர் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்க காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்து தமிழுக்கு வந்தார் நடிகை சுனைனா. முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், கோலிவுட்டில் சுனைனாவுக்கான இடம் ஒதுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் நகுலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அத்திரைப்படம் மாசிலாமணி. இதையடுத்து, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, உள்பட பல திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் தான் ராக்கெட் டிரைவர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதனிடையே நடிகை சுனைனா தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக அண்மையில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார். ஆனால், யார் என்று அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில், நடிகை சுனைனா, துபாயைச் சேர்ந்த பிரபல யூ டியூபர் கலித் அல் அமேரியை காதல் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

MUST READ