இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து பேசி உள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் சில படங்கள் இயக்கி இருந்தாலும் விஷால், எஸ் ஜே சூர்யா கூட்டணியில் இவர் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அடுத்தது இவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் அஜித்தின் 63வது படமாகும். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படமானது வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி 28) இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் நடிகர் அஜித்தை தீனா, பில்லா ஆகிய படங்களின் தோற்றத்தில் காண முடிந்தது. அதுமட்டுமில்லாமல் வேதாளம், ரெட் போன்ற படங்களின் குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு அஜித்தின் முந்தைய படங்களின் குறியீடுகளை குட் பேட் அக்லி பட டீசரில் வைத்து ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ஏற்கனவே இவர் அஜித்தின் தீவிர ரசிகன் என்ற நிலையில் ஆரம்பத்தில் இருந்த இவர் அஜித்தை எப்படி காட்டப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டுள்ளார். திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த டீசரை ரசிகர்களும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
“I have took #GoodBadUgly as a fan🫶. I’m very happy that fans are enjoying the teaser. I used to keep banner for #AjithKumar sir, now I’m directing a film with him🥹❤️. AK sir is very happy with the Teaser🔥. Movie is coming on Apr 10th, Santhosama paarunga🥰”
– Aadhik pic.twitter.com/XBbgj3KljZ— AmuthaBharathi (@CinemaWithAB) February 28, 2025
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “குட் பேட் அக்லி படத்தை ஒரு ரசிகனாக எடுத்து இருக்கிறேன். இந்த டீசரை ரசிகர்கள் என்ஜாய் பண்ணி பார்ப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜித் சாருக்கு பேனர் வைத்தவன் நான். இப்போது அவரை இயக்கியிருக்கிறேன். ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படத்தை சந்தோஷமாக வந்து பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.