இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி மார்க் ஆண்டனி என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித், திரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரியா வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று (ஏப்ரல் 16) சென்னையில் விழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதன்படி அவர், “எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. ஒரு சாதாரண பையன் ஒரு ஹீரோவை பார்த்து இன்ஸ்பயர் ஆகி இயக்குனராக வேண்டுமென்ற ஆசைப்பட்டு இந்த இடத்தில் நிற்கிறேன். நான் அஜித்தின் ரசிகனாக இல்லை என்றால் என்ன பண்ணி இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அஜித்தின் ரசிகனாக இருப்பதால் என்ன நடக்கும் என்பதை இந்த தருணம் நிரூபித்திருக்கிறது. அஜித் சார் என்னை சந்திக்கும்போது நான் ஹிட் பட இயக்குனர் இல்லை. அஜித் சார் எப்போதுமே ஹிட், ஃப்ளாப் என்பதை பார்க்க மாட்டார். ஒரு மனிதனாக தான் பார்ப்பார். என்னிடமிருந்து அதை எப்படி பார்த்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எதை வைத்து நான் பெரிய இயக்குனராக மாறுவேன் என்று சொன்னீங்க என அஜித் சாரிடம் கேட்கும்போது. அவர் சாதாரணமாக சிரித்து விட்டுப் போய்விடுவார். அதுதான் அஜித் சார்.
#AdhikRavichandran‘s Speech at #GoodBadUgly Thanks Meet..⭐:
“I didn’t have a good filmography when I met him.. But he sees only the human.. Not Hit or flop.. I told him more ‘i love you’ than my wife..❣️ After My father & mother, You come next sir..🤝”pic.twitter.com/E09nnWRPTz
— Laxmi Kanth (@iammoviebuff007) April 16, 2025
மேலும் இந்த தருணத்தில் நான் சுரேஷ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அஜித் சார் என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தாரோ அதே அளவிற்கு சுரேஷ் சாரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அது சார் எப்போதுமே தன்னை ஸ்டாராக நினைத்ததில்லை ஒரு நடிகராக தான் நினைப்பார். குட் பேட் அக்லி படத்தின் டைட்டில் சொன்னதிலிருந்து, படப்பிடிப்பை முடித்து, டப்பிங் முடித்து, கார் ரேஸுக்கு செல்லும்வரை முழு அர்ப்பணிப்புடன் இருந்தார். ஐ லவ் யூ என்கிற வார்த்தையை என் மனைவியிடம் சொன்னதை விட அஜித் சாரிடம் நிறைய முறை சொல்லி இருக்கிறேன். என் அப்பா அம்மாக்கு பிறகு அஜித் சார் தான்” என்று தெரிவித்துள்ளார்.