Homeசெய்திகள்சினிமாஅதர்வாவிற்கு ஜோடியாகும் அதிதி சங்கர்!

அதர்வாவிற்கு ஜோடியாகும் அதிதி சங்கர்!

-

- Advertisement -

அதர்வாவிற்கு ஜோடியாகும் அதிதி சங்கர்!நடிகர் அதர்வா கடைசியாக மத்தகம் எனும் வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் அதர்வா ஒத்தைக்கு ஒத்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதர்வா அடுத்ததாக சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. அதன்படி இப்படம் சிவா மனசுல சக்தி படத்தை போல காமெடி கலந்த கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் எம் ராஜேஷ், அதர்வா கூட்டணி உருவாக இருக்கும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அதர்வாவிற்கு ஜோடியாகும் அதிதி சங்கர்!

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி சங்கர். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து அதிதி சங்கருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய படத்தில், அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ