spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா, துல்கர் சல்மான், சுதா கொங்கரா கூட்டணியில் இணையும் பிரபல இயக்குனரின் மகள்!

சூர்யா, துல்கர் சல்மான், சுதா கொங்கரா கூட்டணியில் இணையும் பிரபல இயக்குனரின் மகள்!

-

- Advertisement -

சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் அதிதி சங்கர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர்.

we-r-hiring

மேலும் இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகை அதிதி சங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சங்கரின் மகளான அதிதி, கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணியில் வெளியான ‘விருமன்’ படத்தில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனது துறுதுறு நடிப்பு மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது சுதா கொங்கரா சூர்யா கூட்டணியில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவரின் திறமை தான் அவரை பல படங்களில் இடம் பெறச் செய்வதாக நம்புவோம்!

MUST READ