spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் ஆகிறார் சசிகுமார்

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் ஆகிறார் சசிகுமார்

-

- Advertisement -
12 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் ஆகிறார் சசிகுமார்.

2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூலை வாரி தந்தது. மேலும் சில விருதுகளையும் வாங்கி குவித்தது.

மீண்டும் இயக்குனர்

we-r-hiring

அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு ஈசன் என்ற படத்தை இயக்கினார் சசிகுமார். பிறகு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு வந்ததால் முழுநேர நடிகராக கவனம் செலுத்தி வந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சசிகுமார் மீண்டும் இயக்குனராகிறார்.

அவர் இயக்கப் போவது திரைப்படம் அல்ல ஒரு வெப் சீரிஸ். குற்றப்பரம்பரை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

12 ஆண்டுகள்

இந்த சீரிஸில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மதுரை வீரன் என்ற படத்தின் மூலம் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ