Homeசெய்திகள்சினிமாநீண்ட நாட்களுக்கு பிறகு 'தங்கலான்' பட அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்!

நீண்ட நாட்களுக்கு பிறகு ‘தங்கலான்’ பட அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்!

-

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு 'தங்கலான்' பட அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்!ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பல பெரிய படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தங்கலான் திரைப்படமும் தேர்தலுக்குப் பின்னரே ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.நீண்ட நாட்களுக்கு பிறகு 'தங்கலான்' பட அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்! இந்நிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் சமீபத்தில் நடந்த பேட்டியில், “தங்கலான் படத்தின் வேலை முழுவதும் முடிந்து விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பிற்காக தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி இந்த படத்தின் ரிலீஸ் தேடிய லாக் செய்துவிட்டு சென்சாருக்கு அனுப்பி வைப்போம். படம் அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். நானும் படத்தை பார்த்தேன். ரசித்தேன். பல வதந்திகள் பரவி வருகிறது அவை எதுவும் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ