Homeசெய்திகள்சினிமாகண்ணப்பா படத்தில் இணையும் காஜல்... நட்சத்திர பட்டாளமாக உருவாகும் திரைப்படம்...

கண்ணப்பா படத்தில் இணையும் காஜல்… நட்சத்திர பட்டாளமாக உருவாகும் திரைப்படம்…

-

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார். ஸ்ரீ சரண் பகாலா இதற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இந்நிலையில், தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள கண்ணப்பா படத்தில் காஜல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடிக்க பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் வெளியாக உள்ளது.

MUST READ