spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஏஜிஎஸ் 24' பட டைட்டில் லுக் வெளியீடு.... ஹீரோ யார் தெரியுமா?

‘ஏஜிஎஸ் 24’ பட டைட்டில் லுக் வெளியீடு…. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது. அந்த வகையில் சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், பிகில் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகிய மூவரும் ஆவர்.

தற்போது இந்நிறுவனம் தனது 24 வது படத்தை தயாரிக்க உள்ளது. அதன்படி ஏஜிஎஸ் 24 பட டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற தலைப்புடன் போஸ்டர் ஒன்றை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சதீஷ் மற்றும் ரெஜினா கசான்ட்ரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படம் ஹாரர்- காமெடி- ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. மேலும் இது தொடர்பான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

we-r-hiring

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தளபதி 68 மற்றும் தனி ஒருவன் 2 திரைப்படத்தையும் இயக்கவுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் திரைப்படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ