spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க.... சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

நிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க…. சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

-

- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, சூரி குறித்து பேசி உள்ளார்.நிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க.... சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது நடிப்பில் மண்டாடி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவர் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விளங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க.... சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஹேஷம் அப்துல் வாகப் இதற்கு இசையமைத்துள்ளார். தாய்மாமன் – மருமகனுக்கு இடையிலான உறவை மையமாக வைத்து குடும்பப் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, சூரி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நிறைய பேர் என்கிட்ட சூரி கூட நடிப்பதற்கு உங்களுக்கு ஓகேவா என்று கேட்கிறார்கள். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். நிறைய பேர் என்கிட்ட அப்படித்தான் கேக்குறாங்க.... சூரி குறித்து பேசிய ஐஸ்வர்யா லக்ஷ்மி!சூரி சாருடன் நடிப்பது எனக்கு பெருமை. ஏனென்றால் அவர் மிகவும் நேர்மையான மனிதர். உயரமான இடத்தில் இருக்கிறார். அவர் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை இருக்கிறது. அவர் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு, மரியாதை இருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதில் பெருமை தான் எனக்கு. உங்க கூட நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதற்கு நன்றி சூரி சார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ