spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'வளையம்'..... பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘வளையம்’….. பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!

-

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வளையம் படத்தின் பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது.ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வளையம்..... பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சொப்பண சுந்தரி, டிரைவர் ஜமுனா, பர்ஹானா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சிஸ்டர் போன்ற திரைப்படங்களும் உருவாகி வருகின்றன. அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் வளையம் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டில்லி பாபு தயாரிக்க அறிமுக இயக்குனர் மனோ பாரதி இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வளையம்..... பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி!இந்த படத்தில் டில்லி பாபுவின் அக்கா மகன் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தேவ் என்பவரின் போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் மகேந்திரா எம் ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய பிரிட்டோ மைக்கேல் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பட குழுவினர் நேற்று வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து இன்று இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டுள்ளார்.

we-r-hiring

இது சம்பந்தமான புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த படம் டைம் டிராவல் – டைம் லுக் சம்பந்தமான கதை களத்தில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ