spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’….. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?……விமர்சனம் இதோ!

-

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படமான லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்து முஸ்லீம் என வாழும் ஒட்டு மொத்த ஊரும் மத பாகுபாடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊரில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!இது ஒரு பக்கம் இருக்க ரஜினியின் மூலமாக தொடங்கப்பட்ட 3 ஸ்டார் என்ற கிரிக்கெட் அணியில் விஷ்ணு விஷால் விளையாடி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். ஆனால் திடீரென்று ஒரு கட்டத்தில் அவர் அணியிலிருந்து வெளியேறி எம் சி சி என்ற வேறொரு அணிக்கு கேப்டன் ஆகிறார். அதன் பின் விஷ்ணு விஷாலின் தலைமையிலான எம் சி சி அணி தொடர்ந்து வெற்றி பெற்று வர 3 ஸ்டார் அணி தோல்வியை மட்டுமே சந்திக்கிறது. இந்நிலையில் எப்படியாவது எம்சிசி அணியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் மும்பையில் உள்ள ரஜினியின் மகன் விக்ராந்தை அழைத்து வந்து விளையாட வைக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் ரஜினி மற்றும் அவரின் மகன் விக்ராந்தின் கனவு ஆகும். இந்நிலையில் சிறு வயதிலிருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்திற்கும் ஒத்துப்போகாத சூழ்நிலையில் இருக்கின்ற பட்சத்தில்
இருவரும் கிரிக்கெட் விளையாட்டில் மோத நேரிடுகிறது. இந்த விளையாட்டின் மூலம் சிலர் எப்படியாவது ஊருக்குள் முஸ்லிம் ஓட்டுக்களை பெற்று விட வேண்டும் என்று ஆதாயம் தேடுகிறார்கள். இதன் பின் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் அரசியல் நுழைந்தால் அவரின் வாழ்க்கை என்னாகும் என்பது தான் படத்தின் மீதி கதை.ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!

we-r-hiring

ரஜினி இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் படம் முழுவதுமே அவரைச் சுற்றி நடப்பது போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில காமெடி காட்சிகளிலும் சரி எமோஷனல் காட்சிகளும் சரி வழக்கம் போல் ரஜினியின் காட்சிகள் கூஸ்பம்பாக இருக்கிறது. குறிப்பாக ரஜினியின் மகனாக நடித்துள்ள விக்ராந்திற்கும் ரஜினிக்கும் இடையிலான எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!

இந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்து முஸ்லிம் மதத்தை காட்டி இருப்பது படத்திற்கு எதிர்ப்புகளை தேடி தரும் என்பதை பொருட்படுத்தாமல் தான் என்ன கதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை சரியாக கொடுத்திருக்கிறார். மதத்தினால் ஆதாயம் தேடும் அரசியலும் அதனால் சீரழியும் இளைஞர்களும் என எந்தவித சர்ச்சைகளைப் பற்றியும் யோசிக்காமல் படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல்  ஊர் திருவிழாவாக இருக்கட்டும், கடைசியில் அனைவரின் ரத்தத்தில் மதம் இல்லை என்ற மெசேஜாக இருக்கட்டும் என அனைத்திலும் பாராட்டை பெறுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!

படத்தில் ஒரு சில இடங்களில் சில தொய்வுகள் இருந்தாலும் படத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏ ஆர் ரகுமான் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். அதிலும் தேர் திருவிழா எனும் பாடலுக்கு திரையரங்கம் முழுவதும் கரகோஷம் தான்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் எமோஷனல் காட்சிகளில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடியன்ஸை அசத்தியுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்'..... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?......விமர்சனம் இதோ!அதிலும் திருவிழா என்பது சாமிக்காக நடத்தப்படுவது கிடையாது வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழும் சொந்த பந்தங்கள் ஒன்றாகத் திரண்டு மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் தான் திருவிழா என்று செந்தில் பேசும் வசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்வாறு ஒரு அழுத்தமான கதையை ஆழமாகவும் நெற்றி பொட்டில் அடித்தாற் போன்றும் கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா.

எனவே குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் தான் லால் சலாம்.

MUST READ