Homeசெய்திகள்சினிமாகன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்... கன்னட சூப்பர்ஸ்டாருடன் ஜோடி...

கன்னட திரையுலகில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கன்னட சூப்பர்ஸ்டாருடன் ஜோடி…

-

உத்ரகாண்டா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.

சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஸ். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். அவரது திரை வாழ்வில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம் காக்கா முட்டை. இப்படத்தின் வெற்றி அவரை முன்னனி நாயகியாக உயர்த்தியது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டியர். இப்படத்தில் ஜிவி. பிரகாஷூடன் இணைந்து நடித்திருப்பார்.

இதையடுத்து, ஐஸ்வர்யா நடிப்பில் கருப்பர் நகரம், தீயவர் குலைகள் நடுங்க, மோகன்தாஸ் மற்றும் வளையம் உள்ளிட்ட தமிழ் படங்கள் உருவாகி வருகின்றன. தமிழ் மட்டுமன்றி மலையாளத்திலும், அஜயண்டே ராண்டம் மோசனம் மற்றும் ஹெர் ஆகிய திரைப்படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக கன்னட திரையுலகிலும் அறிமுகமாக இருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்ஜெயா நடிக்கும் புதிய படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ளது. இத்திரைப்டத்திற்கு உத்ரகண்டா என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இத்திரைப்படத்தில் துர்கி என்ற வேடத்தில் ஐஸ்வர்யா நடிக்கிறார். இது தொடர்பான போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ