spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்.... 'விடாமுயற்சி' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்…. ‘விடாமுயற்சி’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் ஆரம்பத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் சிங்கிளாக திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி மிகப்பெரிய ஸ்டார் நடிகராக உருவெடுத்துள்ளார். 32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்.... 'விடாமுயற்சி' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இரட்டை வேடங்களானாலும் சரி, மூன்று வேடங்களானாலும் சரி அனைத்திலும் மிரட்டி விடுவார். மேலும் காதல், ஆக்சன், சென்டிமென்ட் என எந்த காட்சியாக இருந்தாலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி விடுவார்.

இந்நிலையில் துணிவு படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை தடம், தடையறத் தக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

we-r-hiring

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறையில் நுழைந்து 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக விடாமுயற்சி படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆரா ரணங்களும்… யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ