Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஆதிக் இயக்கத்தில் நடிக்க திட்டம் போட்ட அஜித் ..... பச்சைக் கொடி காட்டுமா 'குட் பேட் அக்லி'?

மீண்டும் ஆதிக் இயக்கத்தில் நடிக்க திட்டம் போட்ட அஜித் ….. பச்சைக் கொடி காட்டுமா ‘குட் பேட் அக்லி’?

-

- Advertisement -

நடிகர் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.மீண்டும் ஆதிக் இயக்கத்தில் நடிக்க திட்டம் போட்ட அஜித் ..... பச்சைக் கொடி காட்டுமா 'குட் பேட் அக்லி'?

தமிழ் சினிமாவின் தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவர் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். எனவே அஜித்தை திரையில் கண்டு அவரை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் காத்துக் கொண்டிருப்பார்கள். அதன்படி இரண்டு வருடங்களுக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தை ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்தனர். இருப்பினும் சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் நடிகர் தனுஷ், அஜித்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மீண்டும் ஆதிக் இயக்கத்தில் நடிக்க திட்டம் போட்ட அஜித் ..... பச்சைக் கொடி காட்டுமா 'குட் பேட் அக்லி'?எனவே இந்த கலக்கலான காம்பினேஷனில் உருவாகும் படம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்ய தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தான் குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தால் நடிகர் அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை எப்படி காட்டப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ