Homeசெய்திகள்சினிமாஸ்மார்ட்டாக நடந்து வரும் அஜித்..... மற்றுமொரு புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்!

ஸ்மார்ட்டாக நடந்து வரும் அஜித்….. மற்றுமொரு புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை திரிஷா இல்லனா நயன்தாரா, பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஸ்மார்ட்டாக நடந்து வரும் அஜித்..... மற்றுமொரு புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்! தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் படத்தின் மெயின் வில்லனாக நடிகர் பிரசன்னா நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதேசமயம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்தின் புதிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஸ்மார்ட்டாக நடந்து வரும் அஜித்..... மற்றுமொரு புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்!சமீபத்தில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் டான் லுக்கில் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் ஸ்டைலாக ஸ்மார்ட் ஆக நடந்து வருவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

MUST READ