Homeசெய்திகள்சினிமாரேஸ் வீரரின் காலில் முத்தம் கொடுத்த அஜித்.... வைரலாகும் வீடியோ!

ரேஸ் வீரரின் காலில் முத்தம் கொடுத்த அஜித்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. ரேஸ் வீரரின் காலில் முத்தம் கொடுத்த அஜித்.... வைரலாகும் வீடியோ!அதுமட்டுமில்லாமல் அஜித்தின் சினிமா கேரியரிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட அஜித் பேட்டி ஒன்றில், தன்னுடைய அடுத்த படம் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அந்த படம் வெளியாகும் எனவும் கூறியிருந்தார். இதற்கிடையில் அஜித், சிறு வயதிலிருந்தே பைக், கார் ஓட்டுவதில் ஆர்வம் உடையவர். அதன்படி இவர் துபாய், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியினருடன் கலந்து கொண்டு வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இதன் காரணமாக தான் 2025 அக்டோபர் வரை சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். இவருடைய கார் பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும்.

இந்நிலையில் நடிகர் அஜித், இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற FORMULA 1 கார் ரேஸ் வீரரும், தன்னுடைய ரோல் மாடலுமான அயர்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

MUST READ