Homeசெய்திகள்சினிமாவெற்றிக் கோப்பைகளுடன் அஜித்குமார்.... வைரலாகும் புகைப்படம்!

வெற்றிக் கோப்பைகளுடன் அஜித்குமார்…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.வெற்றிக் கோப்பைகளுடன் அஜித்குமார்.... வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அதை பெரிய அளவில் எடுத்துக்கொள்ளாமல் ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்குவார். அவர் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் கடின உழைப்பினால் உயர்ந்த நிலையை அடைந்தவர். உழைப்பு மட்டுமில்லாமல் நேர்மை, அமைதி, அடக்கம், திறமை ஆகியவை அஜித்தின் அடையாளங்கள். எனவே அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது சினிமாவையும் தாண்டி நிறைய இருக்கிறது. அந்த வகையில் அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த ரேஸரும் ஆவார். சிறுவயதிலிருந்தே கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் உடைய அஜித், கடந்த ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற்ற 24H தொடரின் தனது அணியினருடன் பங்கேற்று மூன்றாம் இடத்தை வென்றார். அதைத்தொடர்ந்து இத்தாலி, பெல்ஜியம் நாட்டில் நடந்த பந்தயத்திலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

தற்போது அஜித், வெற்றிக் கோப்பைகளுடன் முகத்தில் சந்தோஷத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு வெற்றியும், விடாமுயற்சி, ஆர்வம், மற்றும் பாதையை நினைவூட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ