நடிகர் அஜித் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளார்.
அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படம் கடந்த ஏப்ரல் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் அஜித் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த வகையில் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது அணியினருடன் பங்கேற்று மூன்றாம் இடத்தை தட்டி தூக்கினார். அதைத்தொடர்ந்து இத்தாலியில் நடந்த கார் பந்தயத்திலும் வெற்றி பெற்றார். அடுத்தது GT4 ஐரோப்பிய தொடரில் பங்கேற்க இருக்கிறார் அஜித். அதற்காக தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் துபாய் ரேஸுக்கு முன்னர் பயிற்சியின் போது நடிகர் அஜித் விபத்தில் சிக்கிய வீடியோ வெளிவந்து அனைவரையும் கதிகலங்க செய்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி அஜித் உயிர் தப்பிய தகவல் வெளியான பிறகுதான் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.
View this post on Instagram
இந்நிலையில் பயிற்சியின் போது அஜித் மீண்டும் விபத்தில் சிக்கியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் நடிகர் அஜித் நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இல்லாமல் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.