Homeசெய்திகள்சினிமாகாட் பிளஸ் யூ மாமே.....வெறித்தனமான லுக்கில் அஜித்.... 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

காட் பிளஸ் யூ மாமே…..வெறித்தனமான லுக்கில் அஜித்…. ‘குட் பேட் அக்லி’ செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.காட் பிளஸ் யூ மாமே.....வெறித்தனமான லுக்கில் அஜித்.... 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அஜித்தின் 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படமானது 2024 தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அஜித்தின் 63 வது படமாக உருவாக்கி இருக்கும் இந்த படத்தை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். காட் பிளஸ் யூ மாமே.....வெறித்தனமான லுக்கில் அஜித்.... 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் அஜித் வெறித்தனமான லுக்கில் காணப்படுகிறார். மேலும் போஸ்டரில் காட் பிளஸ் யூ மாமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ