நடிகர் அஜித், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் கமிட்டாகி இருந்தார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடைந்து அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் அஜித். அதுமட்டுமில்லாமல் கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித் தனது உடல் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். அதன்படி நடிகர் அஜித் ஸ்லிம்மான லுக்கில் இருக்கும் விதவிதமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினி, மகள், மகனுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


