Homeசெய்திகள்சினிமாவிஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா... படப்பிடிப்பை நிறைவு செய்த அக்‌ஷய் குமார்..

விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா… படப்பிடிப்பை நிறைவு செய்த அக்‌ஷய் குமார்..

-

கண்ணப்பா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார், அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

தெலுங்கில் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. பேண்டசி டிராமா கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். கண்ணப்பர் என்ற வேடத்தில் விஷ்ணு நடிக்கிறார். இந்து கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகிறது. இதில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஆகியோர் சிவனாக நடிக்கிறார். கௌரவ வேடத்தில் இருவரும் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்‌ஷய் குமாரும், இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பிரபாஸூம் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவர் படத்திலிருந்து திடீரென விலகியதால் தான், அந்த கதாபாத்திரம் அக்‌ஷய் குமாரிடம் சென்றது. இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். அக்‌ஷய் குமாருடன் இணைந்து பணியாற்றியது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தததாகவும், அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் எனவும் விஷ்ணு மஞ்சு கூறியிருக்கிறார்.

MUST READ