spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவங்க எல்லாரும் என்னை ஆர்மிக்கு வர சொன்னாங்க .... நெகிழ்ச்சியாக பேசிய சிவகார்த்திகேயன்!

அவங்க எல்லாரும் என்னை ஆர்மிக்கு வர சொன்னாங்க …. நெகிழ்ச்சியாக பேசிய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா, ராம்குமார் பாலகிருஷ்ணன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார்.அவங்க எல்லாரும் என்னை ஆர்மிக்கு வர சொன்னாங்க .... நெகிழ்ச்சியாக பேசிய சிவகார்த்திகேயன்! இதற்கிடையில் இவர், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். அவங்க எல்லாரும் என்னை ஆர்மிக்கு வர சொன்னாங்க .... நெகிழ்ச்சியாக பேசிய சிவகார்த்திகேயன்!இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். சி.ஹெச். சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படம் கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான திரையரங்குகளில் நாளை (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகளும் மலேசியா, ஹைதராபாத், கேரளா, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அவங்க எல்லாரும் என்னை ஆர்மிக்கு வர சொன்னாங்க .... நெகிழ்ச்சியாக பேசிய சிவகார்த்திகேயன்!அதற்கு முன்னதாக டெல்லியில் ராணுவ வீரர்களுக்கு சிறப்புக் காட்சிகள் போட்டு காட்டப்பட்டது. இது தொடர்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், டெல்லியில் அமரன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இந்திய ராணுவ வீரர்கள் என்ன சொன்னார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், “அவர்கள் படத்தை பார்த்துவிட்டு நீங்கள் வேற தொழில் செய்கிறீர்கள். எங்களுடன் வந்து ராணுவத்தில் சேர்ந்து விடுங்கள் என்று சொன்னார்கள். இதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக நான் நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

MUST READ