spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் - ஸ்ரீ லீலா நடனமாடும் 'கிஸ்ஸிக்'.... 'புஷ்பா 2' புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

அல்லு அர்ஜுன் – ஸ்ரீ லீலா நடனமாடும் ‘கிஸ்ஸிக்’…. ‘புஷ்பா 2’ புதிய பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 2021-ல் வெளியான புஷ்பா பாகம் 1 – தி ரைஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்திய அளவில் பிரபலமானது. அதைத் தொடர்ந்து புஷ்பா 2 – தி ரூல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.அல்லு அர்ஜுன் - ஸ்ரீ லீலா நடனமாடும் 'கிஸ்ஸிக்'.... 'புஷ்பா 2' புதிய பாடல் குறித்த அறிவிப்பு! இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமார் இயக்க அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகி நடிக்கிறார். மேலும் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தது படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது புஷ்பா 1 படத்தில் சமந்தா நடனமாடியிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குத்தாட்டம் போட வைத்தது. அல்லு அர்ஜுன் - ஸ்ரீ லீலா நடனமாடும் 'கிஸ்ஸிக்'.... 'புஷ்பா 2' புதிய பாடல் குறித்த அறிவிப்பு!அதேபோல் புஷ்பா 2 படத்திலும் சமந்தாவிற்கு பதில் நடிகை ஸ்ரீ லீலா ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடியுள்ள இந்த பாடலுக்கு கிஸ்ஸிக் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி மாலை 7.02 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ