Homeசெய்திகள்சினிமாஅறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2'!

அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’!

-

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படம் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது.அறிவித்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2'!

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தினை சுகுமார் இயக்கி இருந்த நிலையில் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதன் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. என் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது.... 'புஷ்பா 2' படம் குறித்து அல்லு அர்ஜுன்!கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் அறிவித்த தேதிக்கு முன்னதாகவே வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இந்த படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே பல பெரிய ஹீரோக்களின் படங்கள் வியாழக்கிழமை வெளியாகி வரும் நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் வியாழக்கிழமை வெளியாக இருக்கிறது.

MUST READ