சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக சொல்லப்படும் இப்படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்தது சமீபத்தில் சாய் பல்லவியின் முன்னோட்ட வீடியோவை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
Team #amaran onway to #malaysia … single #HeyMinnale in three days ❤️✨💯 @Siva_Kartikeyan @Sai_Pallavi92 @RKFI @saregamasouth @Rajkumar_KP pic.twitter.com/VrLGvXhTeB
— G.V.Prakash Kumar (@gvprakash) September 27, 2024
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், அமரன் படக்குழு மலேசியா செல்வதாகவும் இன்னும் மூன்று நாட்களில் ஹே மின்னலே எனும் முதல் பாடல் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்து சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். எனவே விரைவில் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.