அமரன் படத்தில் இருந்து ஆசாதி பாடல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அதன்படி இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வசூல் வேட்டை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே கூறியதன் படி சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்திருக்கிறது. அந்த அளவிற்கு தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அதே சமயம் சிவகார்த்திகேயனுக்கு இணையாக சாய் பல்லவியும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.
இவ்வாறு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் அமரன் படத்தின் ஆசாதி பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அறிவு இந்த பாடலை எழுதி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.