spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் வெளியாகிறது அமராவதி திரைப்படம்

மீண்டும் வெளியாகிறது அமராவதி திரைப்படம்

-

- Advertisement -

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மே-1ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பதோடு வெளியாகிறது ‘அமராவதி’ திரைப்படம்!

சோழா கிரியேஷன்ஸ், சோழா பொன்னுரங்கம் தயாரிப்பில் 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘அமராவதி’. அரும்பு மீசையுடன் நடிகர் அஜித் நடித்த இந்த காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருந்தார்.இயக்குனர் செல்வா இயக்கியிருந்தார்.

மீண்டும் வெளியாகிறது அமராவதி திரைப்படம்

we-r-hiring

அமராவதி படத்தின் மூலம் அஜித் குமாரை கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வரும் மே மாதம் 1-ம் தேதி, அஜித் குமார் பிறந்தநாள் அன்று, அவரின் முதல் படமான ‘அமராவதி’ படத்தை டிஜிட்டலில் வெளியிட உள்ளதாக தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான பணிகள் பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருகிறது எனவும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசை அமைக்கப்பட்டு வருவதாகவும்.

மீண்டும் வெளியாகிறது அமராவதி திரைப்படம்

அஜித் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாக, மே முதல் தேதி, ‘பிறந்தநாள் பரிசாக’ அமராவதி திரைக்கு வருகிறது என சோழா பொன்னுரங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.

MUST READ