நடிகர் அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அந்த வகையில் மௌனகுரு, ஆறாது சினம், டைரி, இரவுக்கு ஆயிரம் கண்கள் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து வெளியான டிமான்ட்டி காலனி 2 திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பம்பர் படத்தின் இயக்குனர் எம் செல்வகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் அருள்நிதி. இந்த படம் தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இது தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது இந்த படத்தில் அருள் நிதியுடன் இணைந்து இயக்குனரும் நடிகருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். அருள்நிதியே அமீரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அமீர் அதற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -