Homeசெய்திகள்சினிமாகோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள விஜய்.... 'தளபதி 69' படத்தின் முக்கிய அறிவிப்பு!

கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள விஜய்…. ‘தளபதி 69’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

தளபதி 69 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள விஜய்.... 'தளபதி 69' படத்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் வலம் வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார் விஜய். எனவே தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். தளபதி 69 திரைப்படத்தினை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விஜய் ரசிகர்கள் பலரும் விஜயை குடும்பத்தில் ஒருவராக கொண்டாடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தளபதி 69 திரைப்படம் தான் விஜயின் கடைசி படம் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தளபதி 69 படத்தை மிகப்பெரிய அளவில் திருவிழா போல் கொண்டாடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் விஜயின் நடித்துள்ள இந்த 69 படங்களையும் மீண்டும் மீண்டும் பார்ப்போம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த வீடியோவில் ரசிகர்கள் ஒவ்வொருவரும் விஜய் மீதான தங்களின் அன்பை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தி இருப்பதை காண முடிகிறது. இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீடியோவின் இறுதியில் தளபதி 69 படம் தொடர்பான அறிவிப்பு நாளை (செப்டம்பர் 14) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ