spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' பட முக்கிய தகவல்!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘தாஷமக்கான்’ பட முக்கிய தகவல்!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாஷமக்கான் படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' பட முக்கிய தகவல்!

தமிழ் சினிமாவில் ப்யார் பிரேமா காதல், தாராள பிரபு, பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் கடைசியாக ‘டீசல்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர், ‘தாஷமக்கான்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது ஹரிஷ் கல்யாணின் 15ஆவது படமாகும். இதனை ‘லிஃப்ட்’ படத்தின் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஐடிஏஏ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பிரிட்டோ மைக்கேல் இதற்கு இசை அமைக்கிறார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' பட முக்கிய தகவல்! இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், சத்யராஜ், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது ‘தாஷமக்கான்’ என்பது வடசென்னையில் உள்ள ஒரு பகுதியின் பெயராகும். இப்படம் அங்கு நடந்த
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' பட முக்கிய தகவல்!மேலும் அந்த பகுதி ராப் கலாச்சாரத்திற்கு பிரபலமானது. இது இந்த படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அடுத்தது ஏற்கனவே வெளியான தகவலின்படி ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் ராப் பாடகராக நடித்துள்ளார். ப்ரீத்தி முகுந்தன் இந்த படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்திருக்கிறார் எனவும் தகவல் கசிந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ