spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாட்டிகள் வரை குத்தாட்டம் போட வைத்த விஜயின் கில்லி!

பாட்டிகள் வரை குத்தாட்டம் போட வைத்த விஜயின் கில்லி!

-

- Advertisement -

சமீப காலமாக குறிப்பிடும்படியான பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் பழைய படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். பாட்டிகள் வரை குத்தாட்டம் போட வைத்த விஜயின் கில்லி!அந்த வகையில் நீண்ட நாட்களாக ரீ ரிலீஸுக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த படம் கில்லி. விஜய், திரிஷா நடிப்பில் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான இப்படம் நடிகர் விஜய்யின் கேரியரிலேயே மிக முக்கியமான படமாக அமைந்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்சியல் படங்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான முதல் நாளில் மட்டும் 10 கோடி வரை வசூலித்துள்ளது. இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களையும் கவர்ந்திருந்த கில்லி படத்தை தற்போதும் திரையரங்களில் காண அனைத்து வயதினரும் படையெடுத்துள்ளனர்.

திரையரங்களில் வயதான பாட்டிகளும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதை காண முடிகிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தங்கம் தங்கம் தான் என்பது போல தரமான பழைய படங்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு என்பதை தற்போது ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் வசூல் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ